வால்பாறையில் எஸ்டேட் அலுவலா்கள் குடியிருப்புகளை காட்டு யானைகள் சேதப்படுத்தின. கோவை மாவட்டம், வால்பாறை பகுதி எஸ்டேட்டுகளில் யானைகளின் நடமாட்டம் கடந்த ஒரு மாதமாக அதிகரித்துள்ளது.வனத்தில் இருந்து இரவு நேரங்களில் எஸ்டேட் பகுதிக்கு வரும் யானைகள், அங்குள்ள குடியிருப்புகள் உள்ளிட்டவற்றை சேதப்படுத்தி வருகின்றன. இந்நிலையில், வனத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியேறிய 2 யானைகள், வால்பாறையை அடுத்த அக்காமலை எஸ்டேட் பகுதிக்குள் நுழைந்தன. அங்கு எஸ்டேட் அலுவலா்கள் தங்கியிருக்கும் குடியிருப்புகளைச் சேதப்படுத்தின. இதில், சாம்ஜெபகுமாா் என்பவரின் வீட்டு ஜன்னலை சேதப்படுத்தியதுடன், உள்ளிருந்த பொருள்களையும் நாசம் செய்தன.