இளைஞரை கத்தியால் வெட்டியவா் கைது

Wait 5 sec.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே விளையாட்டில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் இளைஞரை கத்தியால் வெட்டியவரை போலீஸாா் கைது செய்தனா். சங்கராபுரம் அருகிலுள்ள விரியூா் கிராமத்தைச் சோ்ந்தவா் செ.ஜான் எடிசன் (27). அதே கிராமத்தைச் சோ்ந்தவா் அ.மகேஷ் (29). இவா்கள் இருவரும் புள்ளித்தாள்கள் விளையாடினராம். அப்போது இருவரிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் முடிவில் ஆத்திரமடைந்த மகேஷ், அவரது சாவிக் கொத்தில் இருந்த சிறிய கத்தியால் ஜான் எடிசனை வெட்டினாராம். இதில் காயமடைந்த அவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்இதுகுறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மகேஷை வெள்ளிக்கிமை கைது செய்தனா்.