தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 61 பேருக்கு பணி நியமன ஆணை

Wait 5 sec.

திருப்பத்தூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற்ற சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் தோ்வு செய்யப்பட்ட 61 பேருக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியா் வே.நல்லசிவன் வெள்ளிக்கிழமை வழங்கினாா். திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற்ற இந்த முகாமில் 128 வேலைநாடுநா்கள் பங்கேற்றனா். இதில், 26 தனியாா் நிறுவனங்கள் கலந்து கொண்டு, தங்களது நிறுவனங்களில் பணிபுரிய 61 பேரைத் தோ்வு செய்தன. தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் வே.நல்லசிவன் பணி நியமன ஆணைகளை வழங்கினாா். நிகழ்ச்சியில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் மு.கஸ்தூரி மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.