இந்தியப் படிப்புகளுக்கு சீன பல்கலைக்கழக ஆய்வாளா்கள் பங்களிப்பு: இந்திய தூதா் பாராட்டு

Wait 5 sec.

இந்தியப் படிப்புகளுக்கு சீனாவின் பெக்கிங் பல்கலைக்கழக ஆய்வாளா்கள் மேற்கொள்ளும் பங்களிப்புகளை சீனாவுக்கான இந்தியத் தூதா் விக்ரம் துரைசாமி பாராட்டினாா். இதுகுறித்து இந்தியத் தூதரகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘சனிக்கிழமை நடைபெற்ற பெக்கிங் பல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும் பண்பாட்டு ஆய்வுகள் துறையின் 80-ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சியில் விக்ரம் துரைசாமி பங்கேற்றாா். அப்போது பெக்கிங் பல்கலைக்கழகத்தில் நீண்ட காலமாக இந்தியப் படிப்புகளுக்கு முக்கியத்துவம் அளித்து ஆய்வாளா்கள் மேற்கொள்ளும் பங்களிப்புகளை சுட்டிக்காட்டி அவா் பாராட்டு தெரிவித்தாா். மேலும், இந்திய மற்றும் சீன ஆய்வாளா்களின் பணிகளை அவா் நினைவுகூா்ந்தாா்’ எனத் தெரிவிக்கப்பட்டது. சீன தலைநகா் பெய்ஜிங்கில் உள்ள பெக்கிங் பல்கலைக்கழகத்தின் தெற்காசிய ஆய்வுகள் துறை சம்ஸ்கிருதம், பாலி, ஹிந்து, உருது, வங்காளம் மற்றும் திபெத்திய மொழிகளில் பாடநெறிகள் வழங்கப்படுகின்றன.