கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்! கூட்ட நெரிசலில் பலியானோர் குடும்பத்துக்கு அரசுப் பணி?

Wait 5 sec.

கரூரில் கூட்ட நெரிசல் சம்பவத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு அரசுப் பணிக்கான நியமன ஆணையை முதல்வர் ச. ஜோசப் விஜய் வழங்கவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.கரூரில் 2025 செப்டம்பர் 27-ஆம் தேதியில் தவெக தலைவரும் முதல்வருவமான விஜய் தலைமையில் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பிரசாரத்தின்போது அதிகளவில் கூட்டம் கூடியதால், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர்; 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.இதனைத் தொடர்ந்து, அப்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலினும், அமைச்சர்கள் அன்பில் மகேஸ் மற்றும் செந்தில்பாலாஜியும் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.இருப்பினும், பாதுகாப்புகள் காரணமாக விஜய் நேரில் செல்லாமல், காணொலி வாயிலாக பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதலும் மன்னிப்பும் கோரினார். தொடர்ந்து, நெரிசலில் சிக்கி பலியானோரின் குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து, அவர்களிடம் விஜய் மன்னிப்பு கோரினார். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.இந்த நிலையில், கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை வருகிற ஜூலை 10 ஆம் தேதியில் முதல்வர் விஜய் நேரில் சந்திக்கவிருப்பதாக அமைச்சர் என். ஆனந்த் கூறியுள்ளார்.அதுமட்டுமின்றி, உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்குவதற்கான நியமன ஆணையையும் முதல்வர் விஜய் வழங்கவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.ரூ.30 லட்சம் வரை லஞ்சம்? அரசு வழக்குரைஞா்கள் நியமன அறிவிப்பாணைக்குத் தடை கோரி மனுCM Vijay is set to provide government jobs to the families of those who lost their lives in the Karur stampede