ஃபிஃபா உலகக் கோப்பை நாக்-அவுட் சுற்றில் கோல்: மிக வயதான வீரராக ரொனால்டோ சாதனை

Wait 5 sec.

ஃபிஃபா உலகக் கோப்பை நாக்-அவுட் சுற்றில் கோல் அடித்த மிக வயதான வீரர் என்ற பெருமையை கிறிஸ்டியானோ ரொனால்டோ பெற்றுள்ளார்.ஃபிஃபா உலகக் கோப்பை 2026 கால்பந்து தொடரின் 32-ஆவது சுற்று ஆட்டத்தில் குரோஷியாவை 2 - 1 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் அணி வீழ்த்தி, ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.மேலும், டொராண்டோ திடலில் நடைபெற்ற இந்தப் போட்டியில் போர்ச்சுகல் அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ, உலகக் கோப்பை நாக்-அவுட் சுற்றில் தனது முதல் கோலை அடித்து சாதனை படைத்துள்ளார்.அதுமட்டுமின்றி, ஃபிஃபா உலகக் கோப்பை நாக்-அவுட் சுற்றில் கோல் அடித்த மிக வயதான வீரர் (41 வயது 147 நாள்கள்) என்ற பெருமையையும் ரொனால்டோ பெற்றுள்ளார்.ஆட்டத்தின் கடைசி விநாடியில் குரோஷியா அணி அடித்த கோல், விஏஆர் பரிசோதனைக்குப் பிறகு, ஆஃப்சைடு என அறிவிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த குரோஷியா ரசிகர்கள், திடலுக்குள் குப்பைகளை வீசி எறிந்து எதிர்ப்பைத் தெரிவித்தனர்.குரோஷியாவை வென்ற போர்ச்சுகல் அணி, அடுத்த சுற்றில் (ஜூலை 6) பலம் வாய்ந்த ஸ்பெயின் அணியை எதிர்கொள்ள தகுதி பெற்றுள்ளது.ரவுண்ட் ஆஃப் 32: தோல்வியிலும் கவனம் பெற்ற காங்கோ கோல்கீப்பர்! FIFA World Cup 2026: Cristiano Ronaldo becomes oldest player to score in World Cup knockout match