என்ன ஆனது? மெனோபாஸ் குறித்து மனம் திறந்த நடிகை த்ரிஷா!

Wait 5 sec.

மெனோபாஸ் எனப்படும் மாதவிடாய் நிற்பகும் நிலைக்கு முந்தைய காலக்கட்டத்தைக் குறிக்கும் பெரிமெனோபாஸ் குறித்து நடிகை த்ரிஷா தன்னுடைய இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.பல நூற்றாண்டு காலமாக, பெண்கள் அடைந்து வரும் பல்வேறு உடல்நிலை மாற்றங்களில் மிக முக்கியமான காலகட்டம் மெனோபஸ் எனப்படும் மாதவிடாய் நிற்கும் காலம். இதற்கு முன்பு, இதுபற்றி அதிகம் பேசப்படவில்லை. ஆனால், தற்போது மெனோபஸ் மற்றும் மெனோ்பாஸ் முந்தைய காலக்கட்டங்கள் குறித்து மருத்துவர்கள் அதிகம் எடுத்துரைத்து எச்சரிக்கைகளை ஏற்படுத்தி வருகிறார்கள்.நேற்று, குஷ்பு மகள் திருமணக் கொண்டாட்ட நாள்களில் இருந்து விடுபட முடியவில்லை என்று த்ரிஷ பகிர்ந்திருந்த நிலையில், இன்று பெரிமெனோபஸ் குறித்து பதிவிட்டிருக்கிறார்.அவருடைய இன்ஸ்டாகிராம் பதிவில், பெரிமெனோபாஸ் என்பது, உங்களுக்கு மகிழ்ச்சி தரும் ஹார்மோன்கள் குறைந்து, எதைப் பற்றியும் கவலைப்படாத ஹார்மோன்கள் ஆதிக்கம் செலுத்தும் ஒரு நிலை என்று ஒருமுறை மருத்துவர் விளக்கியதைக் கேட்டிருக்கிறேன். இதை நானே இதைவிடச் சிறப்பாகச் சொல்லியிருக்க முடியாது என்று பதிவிட்டிருக்கிறார். மாதவிடாய் முற்றிலும் நின்றுவிடும் மெனோபாஸ் என்பதை நோக்கி பெண்களின் உடல் நகருவதற்கான தொடக்கக் காலமே பெரிமெனோபாஸ். இந்த காலத்தில் பெண்களின் உடல் ஹார்மோன் மாற்றங்களுக்கு உள்ளாகும். இது பொதுவாக 40களில் தொடங்கி பெண்களின் உடல்நிலைக்கு ஏற்ப சில முதல் பல ஆண்டுகள் நீடிக்கிறது.இந்தக் காலக்கட்டத்தில்தான், பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜன் குறைந்து, மாதவிடாய் சுழற்சி சீரற்று காணப்படும். இதனால் உடல் மட்டுமல்ல, மனநிலையிலும் மாற்றங்கள் ஏற்படும். திடீரென ஏற்படும் எரிச்சல் உணர்வு, மனநிலை மாற்றம் போன்றவையும் அறிகுறிகளாக உள்ளன.அதாவது அறிவியல்பூர்வமாக சொல்வதானால், 'பெரிமெனோபாஸ்' (Perimenopause) என்பது மாதவிடாய் நின்ற நிலையை (மெனோபாஸ்) அடைவதற்கு முந்தைய இயற்கையான உயிரியல் மாற்றம். பொதுவாக ஒரு பெண்ணின் 40 அல்லது சில வேளைகளில் 35 வயதுக்குப் பிறகு இது தொடங்கும். பெண்ணின் கருப்பை ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன்களை உற்பத்தி செய்வதைப் படிப்படியாகக் குறைக்கும். இதனால் சீரற்ற மாதவிடாய் ஏற்படும். இது சில ஆண்டுகள் நீடித்து படிப்படியாக மாதவிடாய் நிற்கும். ஒரு பெண் தொடர்ந்து 12 மாதங்களுக்கு மாதவிடாய் இல்லாமல் இருப்பதுதான் மெனோபஸ் நிலையை அடைந்துவிட்டதைக் காட்டுகிறது.Actress Trisha posts about perimenopause on her Instagram page.