எடப்பாடி பழனிசாமி நடத்தி வரும் அதிமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி என அமைச்சர் செங்கோட்டையன் விமர்சித்துள்ளார்.ஊழல் சக்திகளையும் தீய சக்திகளையும் தவெக இணைத்துக் கொண்டதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்ததற்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார்.இதுகுறித்து, செய்தியாளர்களுடன் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது, எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் நடத்தியதுதான் இயக்கம். இப்போது இபிஎஸ் நடத்திக் கொண்டிருப்பது ஒரு கார்ப்பரேட் கம்பெனி. அவர் மகன் உள்ளிட்ட 5 பேரின் கருத்துகளை மட்டும் அவர் கேட்பதாலேயே, ஒவ்வ்வொருவராக ராஜிநாமா செய்து வருகின்றனர்.வழக்கு போடுவது வேறு; தண்டனைக்குட்படுவது வேறு. எல்லோர் மீதும்தான் வழக்கு போடுகின்றனர். தண்டனைக்குட்பட்டவர்களா என ஆய்வு செய்ய வேண்டும். ஆகையால், தண்டனைக்குட்பட்டவர்களைக் கட்சியில் சேர்ப்பதுதான் தவறு என்று தெரிவித்தார்.மேலும், தவெகவில் இணைவதற்கு மிரட்டப்பட்டதாக அனிதா ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது, தவறு செய்பவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அனிதா ராதாகிருஷ்ணன் ராஜிநாமா செய்ய வேண்டும் எனச் சொல்லி யாரும் வற்புறுத்தவில்லை.யார் வற்புறுத்தினார்கள் என்று அவர் தெளிவாக எடுத்துச் சொல்ல வேண்டும் என்று தெரிவித்தார்.ஃபீனிக்ஸ் பறவையென மீண்டெழுகிறோம்: மு.க. ஸ்டாலின்Minister Sengottaiyan criticizes the AIADMK led by Edappadi Palaniswami, describing it as a corporate company