சுயநலத்துக்காக ராஜிநாமா செய்த எம்எல்ஏ-க்களை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: பாஜக

Wait 5 sec.

சுயநலத்துக்காக ராஜிநாமா செய்யும் எம்எல்ஏ-க்களை ஜனநாயகத்தை சேர்ந்த மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.திருவொற்றியூரில் செய்தியாளர்களுடன் தமிழிசை சௌந்தரராஜன் பேசியதாவது, "தவெகவினர் ஒரு தூய சக்தி என்பதனை அவர்கள் காத்துக்கொள்ள வேண்டும்.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு மாதம்கூட ஆகவில்லை. எவ்வளவு வரிப்பணம் வீணாகிறது.80,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற விஜயபாஸ்கர் போன்றவர்களெல்லாம், மக்களின் எண்ணங்களை மதிக்காமல் சுயநலத்துக்காக ராஜிநாமா செய்கிறார்கள். சுயநலத்துக்காக ராஜிநாமா செய்யும் எம்எல்ஏ-க்களை ஜனநாயகத்தை சேர்ந்த மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.பணத்தைக் கொடுத்து ஆட்சியைக் கவிழ்க்க பாஜகவுக்கு அவசியமில்லை. தவெக ஆட்சியைக் கவிழ்க்க பணம் கொடுக்கப்பட்ட விவகாரத்தில் பாஜகவுக்கு எந்தப் பங்கும் இல்லை" என்று தெரிவித்தார்.People will not forgive MLAs who resigned for selfish reasons, says BJP Leader Tamilisai Soundararajan