மத்திய அரசின் கீழ் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் காலியாகவுள்ள டெக்னீசியன் பணிகளுக்கு ஆர்வம் உள்ள ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு:வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: 4788/002/REC/HR & A/CHN/2026பணி: Engineering Assistant Traineeபிரிவு: Electronics காலியிடங்கள் : 3பிரிவு: Civilகாலியிடம்: 1சம்பளம்: மாதம் ரூ. 24,500 - 90,000வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.தகுதி: பொறியியல் துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் எலக்ட்ரானிக்ஸ், சிவில் பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.பணி: Technician'C'(Electronics Mechanic)காலியிடங்கள்: 3சம்பளம்: மாதம் ரூ. 21,500 - 82,000வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Electronics Mechante-பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் ஐடிஐ முடித்து ஒரு ஆண்டு அப்ரண்டிஸ் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.விண்ணப்பக் கட்டணம்: ரூ.295. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தவும். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.விண்ணப்பிக்கும் முறை: https://bel-india.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 8.7.2026BEL RECRUITMENT FOR THE POST OF Engineering Assistant Traineeபெல் நிறுவனத்தில் வேலை வேண்டுமா? - டிப்ளமோ, பிஇ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!