கமேனியின் இறுதிச்சடங்கு: ஈரான் சென்றடைந்த இந்திய பிரதிநிதிகள்!

Wait 5 sec.

ஈரானின் முன்னாள் மதகுருவும் உவ்வ தலைவருமான அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக இந்திய பிரதிநிதிகள் ஈரான் சென்றடைந்தனர்.ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே கடந்த பிப். 28 ஆம் தேதி தொடங்கிய போர், தற்போது முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.முன்னதாக, போர் தொடங்கிய முதல் நாளிலேயே அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய கூட்டு வான்வழித் தாக்குதலில் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். அவரின் இறுதிச்சடங்கு நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.தலைநகர் தெஹ்ரானில் உள்ள கிராண்ட் மொசல்லா எனப்படும் மிகப் பெரிய மசூதிக்குள் சவப்பெட்டியில் வைக்கப்பட்டுள்ள கமேனியின் உடலுக்கு உலகெங்கிலும் உள்ள சுமார் 100 நாடுகளைச் சேர்ந்த முக்கிய தூதர்கள், பிரதிநிதிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.கமேனியின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், இந்திய அரசு சார்பில் மத்திய இணையமைச்சர் பவித்ரா மார்கெரிட்டா, பிகார் ஆளுநர் சையத் அட்டா ஹஸ்னைன் ஆகியோர் ஈரானின் தலைநகர் தெஹ்ரானுக்கு சென்றடைந்துள்ளனர். இந்த நிலையில், இந்திய அரசு சார்பாக அவர்கள் இருவரும் அஞ்சலி செலுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.கமேனியின் இறுதிச்சடங்கு: தெஹ்ரானில் திரளும் உலகத் தலைவர்கள்! உச்சகட்ட பாதுகாப்பில் ஈரான்Indian representatives have arrived in Iran to attend the funeral of Iran's former cleric and Supreme Leader, Ayatollah Ali Khamenei.