குடும்பத்துடன் லண்டன் புறப்பட்டார் மு.க. ஸ்டாலின்!

Wait 5 sec.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் 10 நாள் பயணமாக இன்று லண்டன் புறப்பட்டுச் சென்றார். சென்னை விமான நிலையத்தில் இருந்து குடும்பத்தினருடன் லண்டன் புறப்பட்ட மு.க. ஸ்டாலினை, திமுக முன்னாள், அமைச்சர்கள், நிர்வாகிகள் வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.மு.க. ஸ்டாலினின் பேரனும் உதயநிதியின் மகனுமான இன்பநிதியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள அனைவரும் லண்டன் செல்வதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் மான்செஸ்டரில் இன்பநிதி உயர்கல்வி பயின்று வருகிறார். அவர் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளும் ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினர் அங்கேயே சில நாள்கள் தங்கியிருக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தனது பயணத்திற்கு முன்னதாக தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், திமுக மீண்டும் ஃபீனிக்ஸ் பறவைபோல் மீண்டு வரும் என்றும் இரண்டு வாரங்கள் வெளிநாடு சென்றாலும், எனது மனம் எப்போதும் அறிவாலயத்திலேயே இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார். M.K. Stalin left for London with his familyஃபீனிக்ஸ் பறவையென மீண்டெழுகிறோம்: மு.க. ஸ்டாலின்