போர்ச்சுகல் - குரோஷியா மோதிய உலகக் கோப்பை ரவுண்ட் ஆஃப் 32 போட்டியில் ஏற்பட்ட சர்சையினால் சமூக வலைதளத்தில் ரசிகர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். டொராண்டோ திடலில் நடைபெற்ற இந்தப் போட்டியில் போர்ச்சுகல் அணி 2-1 என வென்றது. இதில் முதல் பாதி 0-0 என முடிய, 53ஆவது நிமிஷத்தில் இவான் பெரிசிச் கோல் அடித்து 1-0 என குரோஷியா முன்னிலை வகித்தது. அடுத்து, ரொனால்டோவுக்குக் கிடைத்த பெனால்டியில் 68ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து 1-1 என போர்ச்சுகல் சமன்படுத்தியது. அடுத்து, 90+4ஆவது நிமிஷத்தில் கான்சாகோ ராமோஸ் கோல் அடித்து 2-1 என போர்சுகலை முன்னிலைப் படுத்தினார். இதனைச் சமன்படுத்தும் விதமாக 90+13ஆவது நிமிஷத்தில் குரோஷியா கோல் அடித்தது. இது விஏஆர் (விடியோ அசிஸ்டன்ஸ் ரெஃபரி) முடிவுக்குப் பிறகு கோல் இல்லை எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. குரோஷியாவின் இகோர் மட்டானோவிச் (20) பந்தைத் தடுக்க முயல, போர்ச்சுகல் அணியினரும் எகிறி அவரது தலையில் இடித்தார்கள். ஆனால், பந்து எங்கேயும் படாமல் போர்ச்சுகல் வீரர் ரெனாடோ வெய்கா (13) தலையில் பட்டு வந்தது. இந்தப் பந்தை மற்றுமொரு குரோஷிய வீரர் கோல் அடித்தார். Apparently FIFA is scrubbing this video from the web. Did you notice on ALL replays, it was a far away side angle during VAR where you’re told “if he touched the ball he was offsides” but they missed the spot- the Croatia player never makes contact with the ball. Rigged, and… pic.twitter.com/o3Q3Yz7nIk— Behold A Pale Horse (@BeholdPaleH0rse) July 3, 2026பின்னர், விஏஆர் அளித்த தகவலின்படி இந்தப் புதிய கால்பந்தில் பொறுத்தப்பட்டுள்ள சிப்பின் உதவியால் இகோர் மட்டானோவிச் தலைமுடியில் பந்து லேசாகப் பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. இதனால், குரேஷியா அடித்த கோல் ஆஃப்சைடு எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. According to the data provided by Connected Ball Technology housed within the @adidasfootball Trionda, the official match ball of the @FIFAWorldCup, it was proven that contact was made by Croatia's #20 Igor Matanović in the build up to the goal against Portugal, allowing the… pic.twitter.com/AyBz11N3wV— FIFA Media (@fifamedia) July 3, 2026ஆத்திரமடைந்த குரோஷியா ரசிகர்கள், திடலுக்குள் குப்பைகளை வீசி எறிந்து எதிர்ப்பைத் தெரிவித்தனர். கால்பந்து வீரர்கள் இது முற்றிலும் அநியாயமானது என்றும் குரோஷியாவின் கோல் திருடப்பட்டது என்றும் கூறிவருகிறார்கள்.ஆஃப்சைடு விதி என்றால் என்ன? கால்பந்தை பாஸ் (Pass) செய்யப்படும் அந்தக் குறிப்பிட்ட நொடியில், கோல் அடிக்க முயற்சிக்கும் அணியின் வீரர் (Attacking Player) எதிரணியின் கோல்கீப்பர் உள்பட கடைசி இரண்டு வீரர்களுக்கு ( Last two defenders) முன்னதாகவே நின்றுகொண்டிருந்தால் அது 'ஆஃப்சைடு' ஆகும்.அதாவது, கோல் கீப்பரைத் தவிர்த்து ஒரு டிஃபெண்டராவது முன்பாக இருக்க வேண்டும். டிஃபெண்டர்களைத் தாண்டி முன்னதாகவே எதிரணியினர் இருந்தால் அது 'ஆஃப்சைடு' எனக் கூறப்படுகிறது. இங்கு குரோஷியா விஷயத்தில் பந்து பாஸ் செய்யப்படும்போது சரியாகவே இருந்துள்ளார். ஆனால், இடையில் பந்து தலையில் பட்டதாக கூறும்போது குரோஷிய வீரர் ஆஃப்சைடு நிலையில் இருக்கிறார். பந்து தலையில் படாவிட்டால் இது ஆஃப்சைடு அல்ல. இதனால் சமூக வலைதளமே இரு கட்சியாக பிரிந்து சண்டையிட்டு வருகிறார்கள். ஒருவேளை இந்த கோல் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தால் ஆட்டம் கூடுதல் நேரத்திற்க்குச் சென்றிருக்கும். அதிலும் சமனாகியிருந்தால் பெனால்டி ஷூட் அவுட்டுக்குச் சென்றிருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.How and why was this goal disallowed? There was no contact with the ball. The agenda is real pic.twitter.com/DWA5oYe0Zo— Bby Nash Alonso (@Nashiline) July 3, 202672 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் நாக் அவுட் வெற்றி: அல்ஜீரியாவை வென்று ஸ்விட்சர்லாந்து சாதனை!Was Croatia's goal robbed? Controversial VAR ruling claims the ball grazed the hair!