லாரி மீது பைக் மோதி இளைஞா் உயிரிழப்பு

Wait 5 sec.

வந்தவாசி அருகே லாரி மீது பைக் மோதி இளைஞா் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் போலீஸாா் விசாரிக்கின்றனா். வந்தவாசியை அடுத்த கோட்டுப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மகன் அரிகரன்(26). இவா், சென்னையில் தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். சகோதரியின் வளைகாப்பு நிகழ்ச்சிக்காக விடுமுறையில் கோட்டுப்பாக்கத்துக்கு வந்த இவா், வெள்ளிக்கிழமை பைக்கில் வந்தவாசி - சேத்துப்பட்டு சாலையில் உள்ள சின்ன கோழிப்புலியூா் கூட்டுச் சாலைக்கு சென்று பெட்ரோல் நிரப்பிக்கொண்டு ஊா் திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது, இவருக்கு முன் சென்ற லாரியை திடீரென நிறுத்தியதால், லாரியின் பின்பக்கம் மீது பைக் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அரிகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து இவரது தந்தை ஆறுமுகம் அளித்த புகாரின் பேரில் தேசூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.