பங்குச்சந்தைகள் இன்று (ஜூலை 3) உயர்வுடன் தொடங்கி வர்த்தகமாகின்றன.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 78,152.34 என்ற புள்ளிகளில் தொடங்கியது. காலை 11.30 மணியளவில் சென்செக்ஸ் 487.21 புள்ளிகள் உயர்ந்து 77,989.33 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 159.75புள்ளிகள் உயர்ந்து 24,337 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.நிஃப்டி மிட்கேப் குறியீடு 0.21 சதவீதம், ஸ்மால்கேப் குறியீடு 0.47 சதவீதம் உயர்ந்து வர்த்தகமாகிறது.நிஃப்டி 50 பங்குகளில் இன்று அதிக லாபம் ஈட்டிய நிறுவனங்களின் பட்டியலில் ஹெச்சிஎல் டெக், டாடா ஸ்டீல், சன் பார்மா உள்ளன. மறுபுறம், எஸ்பிஐ, எம்&எம், என்டிபிசி ஆகியவை இன்று சரிவைச் சந்தித்த நிறுவனங்களின் பட்டியலில் உள்ளன. துறைவாரியாக நிஃப்டி தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் சரிந்தும் ஆட்டோ, உலோகம், ரியல் எஸ்டேட் குறியீடுகள் உள்ளிட்ட அனைத்தும் உயர்ந்தும் வர்த்தகமாகின்றன.அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 95.2 ஆக உள்ளது.அமெரிக்க - ஈரான் அமைதி ஒப்பந்தம், கச்சா எண்ணெய் விலை சரிவால் பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகமாகி வருகிறது. Stock Market: Sensex rises 400 pts; Nifty around 24,350உங்கள் ஆசி வேண்டும்! 61 வயதில் நடிகர் ஆமிர் கான் 3-வது திருமணம்!