நடிகர் மாதவன் நடிப்பில் உருவான ஜிடிஎன் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. நடிகர் மாதவன் ராக்கெட்ரி படத்தின் வெற்றிக்குப் பின் சைத்தான் படத்தில் நடித்தார். இப்படமும் வசூல் ரீதியாக வெற்றிப்படமாக அமைந்தது. இதுபோக, இணையத் தொடர்களிலும் நடித்து வருகிறார்.தற்போது, மறைந்த ஆராய்ச்சியாளரும் கண்டுபிடிப்பாளருமான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கைக் கதையில் ஜி.டி. நாயுடுவாக மாதவன் நடித்துள்ளார்.ராக்கெட்ரி படத்தை தயாரித்த டிரை கலர்ஸ் பிலிம்ஸ் மற்றும் வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இப்படத்தை தயாரிக்க, கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கியுள்ளார்.இப்படம் வருகிற ஜூலை 17 ஆம் தேதி பான் இந்திய மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இந்த நிலையில், ஜிடிஎன் திரைப்படத்தின் டிரைலரை இன்று வெளியிட்டுள்ளனர். இந்தியாவின் எடிசனாக அறியப்பட்ட ஜிடி நாயுடுவின் வாழ்க்கையில் அறியப்படாத பக்கங்களும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன. The trailer for the film GDN, starring actor Madhavan, has been released.