நடிகர் மோகன்லால் இயக்குநர் திலீஷ் போத்தன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். நடிகர் மோகன்லால் நடித்த எம்புரான், துடரும் ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து இயக்குநர் சத்யன் அந்திகாட் இயக்கத்தில் ஹிருதயப்பூர்வம் என்கிற திரைப்படத்தில் நடித்தார். அப்படமும் நல்ல விமர்சனங்களைப் பெற்று ரூ. 100 கோடி வரை வசூலித்தது.தற்போது, துடரும் இயக்குநர் தருண் மூர்த்தி இயக்கத்தில் அதிமனோகரம் படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும், சத்யன் அந்திகாட் இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறார். Happy to announce my upcoming project #NedumkandamMiracleDirected by @iDileeshPothan Produced by @AchubjohnWritten by #SyamPushkaran & #PaulsonSkariaCinematography by @shyjukhalid Music by #SushinShyamEdited by #SaijuSreedharanRolling Soon#AjayanChalissery #MasharHamsa… pic.twitter.com/cpS7cbtLFA— Mohanlal (@Mohanlal) July 3, 2026 இந்த நிலையில், மகேஷனிண்ட பிரதிகாரம், தொண்டிமுதலும் த்ரிக்ஷாட்சியும், ஜோஜி உள்ளிட்ட படங்களை இயக்கிய திலீஷ் போத்தன் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு, நெடும்கண்டம் மிராகிள் (Nedumkandam Miracle) எனப் பெயரிட்டுள்ளனர். பிரபல திரைக்கதை எழுத்தாளர் ஷ்யாம் புஷ்கரன் கதை எழுத, சிஷு காலித் ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாம் இசையமைக்க உள்ளார். நல்ல திரைப்படங்களை இயக்கிய திலீஷ் போத்தன் தற்போது மலையாள சினிமாவின் முக்கியமான நடிகராகவும் அறியப்படுவது குறிப்பிடத்தக்கது. என்ன ஆனது? மெனோபாஸ் குறித்து மனம் திறந்த நடிகை த்ரிஷா! Actor Mohanlal is set to act under the direction of Dileesh Pothan.