கெங்கவல்லி அருகே அடுத்தடுத்து நான்கு வீடுகளில் திருட்டு

Wait 5 sec.

கெங்கவல்லி அருகே அடுத்தடுத்து நான்கு வீடுகளில் திருட்டு போனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கெங்கவல்லி அருகே 74.கிருஷ்ணாபுரத்தில் அடுத்தடுத்த 4 வீடுகளில் வியாழக்கிழமை நள்ளிரவு மொத்தம் 6 கைப்பேசிகள், அரை பவுன் தங்கம், ரூ. 13 ஆயிரம் ரொக்கம் திருட்டு போனது. இதுகுறித்து கெங்கவல்லி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்த போலீஸாா், அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வுசெய்து திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.