இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டிக்கான பிளேயிங் லெவனை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் முதலில் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டிக்கு மழை காரணமாக முடிவு எட்டப்படாத நிலையில், மான்செஸ்டரில் நாளை (ஜூலை 4) இரண்டாவது டி20 போட்டி நடைபெறுகிறது.இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டிக்கான பிளேயிங் லெவனை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.Two changes for Manchester Click below for the full story:— England Cricket (@englandcricket) July 3, 2026இரண்டாவது டி20 போட்டிக்கான பிளேயிங் லெவனில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முதல் டி20 போட்டியின் பிளேயிங் லெவனில் இடம்பெற்ற சாக்யுப் மஹ்முத் மற்றும் லூக் வுட் இரண்டாவது போட்டிக்கான பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை.இரண்டாவது டி20 போட்டிக்கான பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ள ஜோஷ் டங் சர்வதேச டி20 போட்டிகளில் அறிமுகமாகவுள்ளார். ஜோஃப்ரா ஆர்ச்சரும் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார்.இரண்டாவது டி20 போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் விவரம்பில் சால்ட், ஜோஸ் பட்லர், ஹாரி ப்ரூக் (கேப்டன்), ஜேக்கப் பெத்தேல், டாம் பாண்டன், சாம் கரண், வில் ஜாக்ஸ், லியம் டாஸன், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷீத், ஜோஷ் டங்.The England Cricket Board has announced the playing XI for the second T20 match against India.இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!