ஜூன் 2026ல் 1.26 கோடி லட்டு விற்று திருப்பதி தேவஸ்தானம் சாதனை!

Wait 5 sec.

திருப்பதி: திருப்பதி திருமலை தேவஸ்தானம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட தகவலின் அடிப்படையில், 2026 ஜூன் மாதம் 1.26 கோடி லட்டுகள் விற்பனை செய்து புதிய சாதனை படைத்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடுகையில் இது 6 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியாகும்.பக்தர்களின் வருகை அதிகரித்ததைக் கருத்தில் கொண்டு, திருமலை திருப்பதி தேவஸ்தானம் லட்டு உற்பத்தியை கணிசமாக அதிகரித்ததோடு, எவ்விதத் தட்டுப்பாடுமின்றி தடையற்ற விநியோகத்தையும் உறுதி செய்தது.ஜூன் 2026ல் 1.26 கோடி லட்டுகள் விற்பனை செய்தது குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டிய நிலையில், கடந்த வருடம் ஜூன் மாதம் உடன் ஒப்பிடுகையில், கூடுதலாக 7.5 லட்சம் லட்டுகள் விற்பனை செய்து 6.37 சதவீத வளர்ச்சியை பதிவு செய்தது.முந்தைய மூன்று மாதங்களுடன் ஒப்பிடுகையில், ஜூன் மாதம் லட்டு விற்பனை அதிகரித்தது. ஜூன் 2024 உடன் ஒப்பிடுகையில் லட்டு விற்பனை 24 லட்சத்திற்கும் அதிகமாக அதிகரித்து, 23.5% வளர்ச்சியை எட்டியுள்ளது.ஏப்ரல் 2026ல் 1.1 கோடிக்கும் அதிகமான லட்டுகளையும், மே 2026ல் 1.2 கோடிக்கும் அதிகமான லட்டுகளையும் தேவஸ்தானம் விற்பனை செய்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.TTD on Friday said it clocked record laddu sales of 1.26 crore in June 2026.பேங்க் ஆஃப் பரோடா மற்றும் ஜிஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் வங்கிக்கு அபராதம் விதிப்பு!