சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 1,200 உயர்ந்து ரூ. 1,09,600 -க்கு விற்பனையாகிறது.தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்தில் இருந்து வருகிறது. இந்த வாரத்தின் தொடக்கத்தில் தங்கம் விலை குறைத்தாலும் கடந்த சில நாள்களாக உயர்ந்து வருகிறது. ஜூலை 1 ஆம் தேதி சவரனுக்கு ரூ. 400 உயர்ந்த நிலையில், நேற்று (ஜூலை 2) காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 உயர்ந்த நிலையில், மாலையில் மேலும் ரூ. 1,200 உயர்ந்தது. தொடர்ந்து இன்றும் (ஜூலை 3, வெள்ளி) சவரனுக்கு ரூ. 1,200 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,09,600 -க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ. 150 உயர்ந்து ரூ. 13,700-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் கடந்த 3 நாள்களில் (ஜூலை 1) முதல் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 4,000 உயர்ந்துள்ளது. ஜூன் 30 ஆம் தேதி தங்கம் விலை ரூ. 1,05,600 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று வெள்ளி விலை ரூ. 5 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 260-க்கும் கிலோவுக்கு ரூ. 5,000 உயர்ந்து, ஒரு கிலோ ரூ. 2,60,000 - க்கும் விற்பனையாகிறது. Chennai live gold and silver rate today july 3சிரிப்பு சரவெடியில் கட்டாகுஸ்தி 2: திரை விமர்சனம்