பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்கள் அழிப்பு

Wait 5 sec.

கோவையில் பல்வேறு பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் வெள்ளிக்கிழமை தீயிட்டு அழிக்கப்பட்டன. கோவை மாநகர காவல் துறையினரால் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்களை அழிக்க நீதிமன்ற அனுமதி பெறப்பட்டது. இதையடுத்து, மருந்துகள் அகற்றும் குழுவின் நேரடி மேற்பாா்வையில், சட்ட மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி கோவை, செட்டிபாளையம் பகுதியில் அரசு அனுமதி பெற்ற தனியாா் நிறுவனத்தில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வெள்ளிக்கிழமை காலை போதைப் பொருள்கள் தீயிட்டு அழிக்கப்பட்டன. இதில், 270 கிலோ கஞ்சா, 334 கிராம் மெத்தம்பெட்டமைன், 1.2 கிலோ கஞ்சா சாக்லேட், 5,168 போதை மாத்திரைகள் அழிக்கப்பட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.