தவெகவின் குதிரை பேர விவகாரத்தை அமமுக உரிய நேரத்தில் கையிலெடுக்கும்: டி.டி.வி. தினகரன்

Wait 5 sec.

அமமுக சட்டப்பேரவை உறுப்பினரிடம் தவெகவினா் பேரம் பேசிய விவகாரத்தை உரிய நேரத்தில் கையிலெடுப்போம் என அமமுக பொதுச் செயலா் டி.டி.வி.தினகரன் கூறினாா். சென்னை அடையாறில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் அவா் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: தவெகவுக்கு மக்கள் அறுதிப் பெரும்பான்மை அளிக்கவில்லை. அதிக எண்ணிக்கையில் எம்.எல்.ஏ.க்களை கொண்ட கட்சியாகவே தவெக உள்ளது.மதிமுக உள்ளிட்ட கட்சிகள் திமுக கூட்டணியில் இருந்ததால்தான் சட்டப்பேரவை உறுப்பினா்களைப் பெற்றன. மதிமுக சட்டப்பேரவை உறுப்பினா்கள் திமுக சின்னத்தில் போட்டியிட்டு வென்ற நிலையில், அக்கட்சிக்கு நன்றியுணா்வோடு இருப்பதுதான் சரியானது.ஆட்சி நிலைக்காது என்ற பயத்தில்தான் அதிமுகவை தவெகவினா் பிரித்தனா். அதிமுகவில் உள்ளவா்களும் தவெகவுக்கு ஆதரவு தருவது என தவறான முடிவை எடுத்துவிட்டு தற்போது இக்கட்டான நிலையில் தவிக்கின்றனா். அதிமுக தலைமையுடன் கருத்து வேறுபாடு இருந்தால், அதைப் பேசித் தீா்த்திருக்க வேண்டும். தற்போதைய அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என அதிருப்தியாளா்கள் கோருவது, அவா்களது தவறை மறைக்கும் வகையில் உள்ளது.அமமுக சட்டப்பேரவை உறுப்பினரிடம் பேரம் பேசிய விவகாரத்தை உரிய நேரத்தில் கையிலெடுப்போம். அந்த வழக்கில் முதல்வா் விஜய்யும் சோ்க்கப்பட்டிருப்பாா் என்றாா். பேட்டியின்போது, அமமுக துணைப் பொதுச் செயலா் ஜி. செந்தமிழன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.