தமிழ்நாடு வேளாண் பல்கலை. தரவரிசை பட்டியல் வெளியீடு: இரண்டு பேர் முதலிடம்!

Wait 5 sec.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 2026–27 கல்வியாண்டிற்கான இளங்கலை மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சங்கோட்டையில் உள்ள எம்.எஸ். சுவாமிநாதன் வேளாண்மை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ஆர். வினோத் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார்.இந்த கல்வியாண்டில் 14 இளங்கலை பாடப்பிரிவுகளுக்கான சேர்க்கைக்காக இணையவழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மொத்தம் 26,709 விண்ணப்பங்கள் வந்த நிலையில், 24,435 விண்ணப்பங்கள் தகுதியானவையாக ஏற்கப்பட்டன. இதில் 15,757 பேர் மாணவிகள். அரசு கல்லூரிகளில் 2,856 இடங்களும், தனியார் இணைப்புக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் 3,051 இடங்களும் இணையவழி கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியலில், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலைச் சேர்ந்த மாணவி மெர்லின் மற்றும் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் மாதவராஜன் ஆகியோர் தலா 200 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தைப் பகிர்ந்துள்ளனர். மேலும், முதல் 10 இடங்களில் 6 மாணவிகள் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.The rank list for undergraduate admissions at Tamil Nadu Agricultural University for the 2026–27 academic year was released today.வார பலன்கள் (ஜூலை 3 - 9) 12 ராசிகளுக்கும்! வருமானம் உயரும் இந்த ராசிக்கு!