அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்க ஜம்முவிலிருந்து 3,865-க்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் அடங்கிய இரண்டாவது குழு வெள்ளிக்கிழமை புறப்பட்டது.தெற்கு காஷ்மீரில் இமயமலையில் 3,880 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ள அமா்நாத் குகைக் கோயிலில் இயற்கையாக உருவாகும் பனிலிங்கத்தை தரிசிக்க பக்தர்கள் ஆண்டுதோறும் யாத்திரை மேற்கொள்வது வழக்கம்.அதன்படி, ஜம்மு முகாமிலிருந்து காஷ்மீரில் உள்ள இரு அடிவார முகாம்களுக்கும் ஏற்கெனவே 4,809-க்கும் மேற்பட்ட யாத்ரீகர்களைக் கொண்ட முதல் குழுவை வியாழக்கிழமை துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா கொடியசைத்து அனுப்பி வைத்தார். தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் உள்ள பஹல்காமில் உள்ள நுன்வான்-பஹல்காம் முகாம் மற்றும் மத்திய காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள சோனாமார்க் பகுதியில் உள்ள பால்டால் முகாம் ஆகியவற்றிலிருந்து ஆண்கள், பெண்கள் மற்றும் சாதுக்கள் அடங்கிய குழுவினர் வெள்ளிக்கிழமை விடியற்காலை ஒரே நேரத்தில் புறப்பட்டனர்.அடிப்படை முகாம்களில் அந்தந்த மாவட்ட துணை ஆணையர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் கொடியசைத்து யாத்திரையைத் தொடங்கி வைத்தனர். இந்த நிலையில், பாதுகாப்புப் படையினர் மற்றும் மத்திய ஆயுதக் காவல் படையினரின் பாதுகாப்புடன், 201 வாகனங்கள் கொண்ட அணிவகுப்புக்கு மத்தியில், யாத்திரையின் இரண்டாவது குழுவைச் சேர்ந்த 3,865-க்கும் மேற்பட்ட பக்தர்கள் வெள்ளிக்கிழமை பகவதி நகர் முகாமிலிருந்து புறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.அமர்நாத் குகைக் கோயிலுக்கான 57 நாள் யாத்திரை, ஆகஸ்ட் 28-ஆம் தேதி நிறைவடைகிறது. Amid tight security, the second batch of more than 3,800 pilgrims left the Jammu base camp on Friday for the Amarnath cave shrine in the south Kashmir Himalayasஅமர்நாத் புனித யாத்திரை தொடங்கியது: முதல் குழுவினர் முகாம்களிலிருந்து புறப்பட்டனர்!