தஞ்சாவூா் ஸ்டுடியோவில் கேமராக்கள் திருட்டு

Wait 5 sec.

தஞ்சாவூரில் ஸ்டுடியோவின் பூட்டை உடைத்து கேமராக்களை திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா். தஞ்சாவூா் ஆற்றுப்பாலம் அருகே திவான் நகரிலுள்ள வணிக வளாகத்தில் வணிகா்கள் வியாழக்கிழமை இரவு கடையைப் பூட்டிவிட்டு, வெள்ளிக்கிழமை காலை திறக்க வந்தனா். அப்போது, ஸ்டுடியோ மற்றும் இரு கடைகளில் இருந்த பூட்டுகள் உடைக்கப்பட்டுக் கிடந்தன. இதில் ஸ்டுடியோவில் இருந்த 3 கேமராக்கள், ஒரு பிரிண்டா் திருடு போனது தெரிய வந்தது. மற்ற இரு கடைகளிலும் பொருள்கள் திருட்டு போகவில்லை. இதுகுறித்து மேற்கு காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.