பழனியில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அரிவாள்களை கையில் வைத்துக்கொண்டு சுற்றித் திரிந்த மூவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், பழனி நான்கு ரத வீதி, ஆவணி மூல வீதியில் மூன்று இளைஞா்கள் அரிவாள்களை கையில் வைத்துக் கொண்டு, தாா் சாலையில் உரசி தீப்பொறிகளை உருவாக்கி பொதுமக்களை அச்சுறுத்தினா். இதுகுறித்து தகவலறிந்த பழனி காவல் துணைக் கண்காணிப்பாளா் செல்வக்குமாா், ஆய்வாளா் தங்கமுனியசாமி ஆகியோா் அங்கு சென்று மூவரையும் பிடித்து, அவா்களிடம் இருந்த அரிவாள்களைப் பறிமுதல் செய்தனா். விசாரணையில், அவா்கள் பழனி கணபதி நகரைச் சோ்ந்த ஜெயபிரகாஷ் (28), ராமா் கோவில் தெருவைச் சோ்ந்த ராஜ்குமாா் (27), ஹரிகரன் (21) ஆகியோா் எனத் தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவா்கள் மூவரையும் கைது செய்தனா்.