பள்ளிகள் அனுமதிக்கு ரூ. 100 கோடி மோசடியில் ஈடுபட்ட தனியார் பள்ளிகள் சங்கத்தலைவர் பி.டி.அரசகுமாரை 3 நாள்கள் போலீஸ் காவலில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.சென்னை சாலிகிராமத்தில் 'தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம்' என்ற பெயரில் பதிவு செய்யப்படாத சங்கத்தை நடத்தி வரும் அரசகுமார் தனக்குள்ள அரசியல் மற்றும் அதிகார தொடர்புகளைப் பயன்படுத்தி தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளித் தரம் உயர்வு, DTCP / CMDA அனுமதிகள் மற்றும் பிற சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி தமிழ்நாடு முழுவதும் உள்ள பல தனியார் பள்ளி நிர்வாகிகளிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டிருக்கிறார்.அவர் உறுதியளித்தபடி, அனுமதிகள் பெற்றுத் தராமலும், பணத்தைத் திரும்பத் தராமலும் சுமார் ரூ. 100 கோடிக்கும் அதிகமான தொகையை வசூலித்து ஏமாற்றிய அரசகுமார் மற்றும் அதன் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கொடுத்த புகாரின் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.விசாரணைக்குப் பின்னர் குற்றம் சாட்டப்பட்ட அரசகுமாரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை கைதுசெய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.மேலும், அவரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு காவல்துறை மற்றும் சிபிசிஐடி சிறப்பு நீதிமன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் மனுத் தாக்கல் செய்தனர்.இந்த மனு வெள்ளிக்கிழமையில் விசாரணைக்கு வந்த நிலையில், பி.டி. அரசகுமாரை 3 நாள்களில் போலீஸ் காவலில் விசாரணை நடத்த அனுமதி வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.முதல்வர் குறித்து அவதூறு: முன்னாள் அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணனுக்கு ஜாமீன்P.T. Arasakumar remanded to 3-day police custody in Rs 100 crore fraud case