இயக்குநர் ஏ. எல். விஜய் முதல்வர் விஜய்யைச் சந்தித்து தலைவா திரைப்படத்தின் புகைப்படத்தைக் கொடுத்துள்ளார். முதல்வர் விஜய் நடிகராக இருந்த போது, அவரது பல திரைப்படங்கள் வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடப்பட்டாலும் இப்போதும் ஒரு திரைப்படத்தின் பெயரைச் சொன்னால், அது விஜய்யின் அரசியல் வாழ்க்கைக்கான படம் என்றே கருதப்படுகிறது. இயக்குநர் ஏ. எல். விஜய் இயக்கத்தில் உருவான தலைவா திரைப்படம்தான் அது. தலைவாவுக்கு வந்த பிரச்னையைத் தமிழ் சினிமா எப்போதும் மறக்காது. டீசர், டிரைலரிலேயே படம் விஜய்யின் வழக்கமான படம் கிடையாது ஏதோ ஒரு செய்தி இருக்கிறது என பரபரப்பு பேச்சுகள் எழுந்தன. அதற்கு ஏற்ப, “Time to lead” என்கிற வாசகத்துடன் தமிழகத்தைத் தவிர உலகம் முழுவதும் தலைவா வெளியானது. கூட்டம், கூட்டமாக விஜய்யைத் திரையில் காண அண்டை மாநிலங்களுக்கு ரசிகர்கள் விரைந்தனர்.பல பேச்சுவார்த்தைகள், மறைமுக அழுத்தங்களுக்குப் பின், “time to lead" வாசகத்தை நீக்கிய பின்பு, தமிழகத்தில் 11 நாட்கள் தாமதமாக தலைவா வெளியானது. அன்றைய முதல்வர் ஜெயலலிதா முன் எஸ். ஏ. சந்திரசேகர் உடன், அருகே கைகட்டியபடி விஜய் இருந்த புகைப்படம் இன்றும் சமூக வலைதளத்தில் சுற்றலில் இருக்கிறது. விஜய்யின் அரசியல் வருகைக்கான முட்டுக்கட்டையாக தலைவாவை எடுத்துக்கொள்ளாமல் இதுதான் ஆரம்பம் என விஜய் உள்ளூர நினைத்திருக்க வேண்டும்.தற்போது, விஜய் முதல்வரான பின்பு இயக்குநர் ஏ. எல். விஜய் அவரை நேரில் சந்தித்து தலைவா திரைப்படத்தில் இடம்பெற்ற, ‘time to lead' வாசகத்துடன் விஜய்யின் பிரபலமான தோற்றத்தைக் கொண்ட புகைப்படத்தை அன்பளிப்பாக கொடுத்திருக்கிறார். காலம் என்னவெல்லாம் செய்கிறது? விஜய் அன்று தனக்கு இப்படியொரு இடம் கிடைக்குமா? என்பதில் சந்தேகத்திருக்கலாம். ஆனால், இப்போது காலம் என்னவெல்லாம் செய்துவிட்டது!என்ன ஆனது? மெனோபாஸ் குறித்து மனம் திறந்த நடிகை த்ரிஷா!Director A. L. Vijay met Chief Minister Vijay and presented him with a photograph from the movie Thalaiva.