கேரளத்தில், 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டதில், 5 சிறார்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பத்தனம்திட்டா மாவட்டத்தில், 9 ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி ஒருவர், தனது வகுப்பைச் சேர்ந்த 4 மாணவர்கள் தன்னை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதே வகுப்பைச் சேர்ந்த மற்றொரு மாணவி அவர்களுக்கு உதவி செய்ததாகவும் பள்ளியில் நடைபெற்ற மனநல ஆலோசனை வகுப்பில் (கவுன்சிலிங்) ஆசிரியரிடம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் தரப்பிலிருந்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், போக்ஸோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் குற்றஞ்சாட்டப்பட்ட 4 சிறுவர்கள் மற்றும் 1 சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுபற்றி, பாதிக்கப்பட்ட சிறுமியின் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரில், 4 மாணவர்களும் அந்தச் சிறுமியைப் பள்ளியின் அருகிலும் குற்றஞ்சாட்டப்பட்ட சிறுமியின் வீட்டிலும் வைத்து பலமுறை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது. மேலும், அந்தச் சிறுவர்களுக்கு குற்றஞ்சாட்டப்பட்ட சிறுமி உதவி செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது.இத்துடன், பள்ளிக்கு வெளியே வேறு நபர்கள் சிலரும் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்தச் சிறுமி கூறியுள்ளது பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. மேலும், குற்றவாளிகளைத் தன்னால் அடையாளம் காண்பிக்க முடியும் எனவும் அவர் அதிகாரிகளிடம் கூறியுள்ளார். இதையடுத்து, இந்தக் குற்றத்தில் ஈடுபட்ட வெளிநபர்களைப் பிடிக்க காவல் துறையினர் தனிக்குழுக்களை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஜூலை 20 முதல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்!In Kerala, a case has been registered against five juveniles following allegations that a 9th-grade student was subjected to repeated sexual assault.