த்ரிஷாவுக்கே இந்த நிலைமையா? ஏமாற்றமளித்த ஆன்லைன் ஷாப்பிங்!

Wait 5 sec.

ஆன்லைன் ஷாப்பிங்கில் ஏமாற்றமடைந்த ஓர் அனுபவத்தை நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பிரபல ஆடை நிறுவனத்தின் மீது நடிகை த்ரிஷா பகிரங்கமான, அதேநேரத்தில் வெளிப்படையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். நடிகை த்ரிஷா தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல புகைப்படங்களையும் கருத்துகளையும் பதிவிட்டு வருகிறார். இன்று பிரபல ஆடை நிறுவனத்தின் மீது பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஆன்லைன் மூலமாக, தான் வாங்கிய ஆடைகளில் துர்நாற்றம் வீசியதாக அவர் புகார் தெரிவித்துள்ளார். இது முதல்முறை அல்ல, தனக்கு 3 ஆவது முறையாக இப்படி நிகழ்ந்துள்ளதாகவும் அந்த ஸ்டோரியில் கூறியுள்ளார். அந்த ஆடைகளில் உடல் வியர்வை நாற்றம் இருந்ததாகவும் அது அருவருக்கத்தக்கதாக இருந்ததாகவும் கூறுகிறார். அதுமட்டுமின்றி அந்த நிறுவனத்திடம் ஒரு பணிவான கோரிக்கையையும் முன்வைத்துள்ளார். பணியாளர்கள் துணிகளை பேக்கிங் செய்வதற்கு முன்பாக அதனை நுகர்ந்து பார்த்து உறுதிசெய்துகொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். அடுத்த முறை வீட்டுக்கு வரும் டெலிவரி பொருள்களில் லேசான துர்நாற்றம்கூட ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதை வலியுறுத்தியுள்ளார்.ஆனால் அவர் என்னென்ன பொருள்கள் ஆர்டர் செய்தார் என்ற விவரங்களைக் குறிப்பிடவில்லை. நடிகை த்ரிஷாவின் இந்த ஸ்டோரி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து நடிகை த்ரிஷாவுக்கே ஆன்லைன் ஷாப்பிங்கில் ஏமாற்றமா? என நெட்டிசன்கள் பலரும் பதிவிட்டு வருகின்றனர். தமிழக முதல்வரும் தன்னுடைய நண்பருமான ஜோசப் விஜய் பிறந்தநாளையொட்டி, அவருடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது. Even Trisha faced this situation, Online shopping that caused disappointment!கரூர் பலி: பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! எப்போது?