முழு பயிர்க்கடன் தள்ளுபடி எப்போது? அமைச்சர் பதில்!

Wait 5 sec.

முழு பயிர்க்கடன் தள்ளுபடி குறித்து முதல்வரிடம் ஆலோசனை செய்த பிறகு அறிவிக்கப்படும் என வேளாண் துறை அமைச்சர் வினோத் தெரிவித்துள்ளார்.தமிழக அரசு வேளாண் நிதிநிலை அறிக்கை இந்த மாதம் தாக்கல் செய்யப்படவுள்ளது.இது குறித்து விவசாயிகளிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(ஜூலை 3)நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வேளாண்மை துறை அமைச்சர் வினோத், சிறுபான்மை துறை அமைச்சர் ஷாஜகான், துறை செயலர்கள் மற்றும் தஞ்சாவூர், நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்று தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்தனர். கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் வினோத், ”2026 வேளாண்மை பட்ஜெட்டில் பல்வேறு கோரிக்கைகள் கேட்கப்பட்டது. பட்ஜெட்டில் சேர்க்க வேண்டிய திட்டங்களை விவசாயிகள் தெரிவித்தனர். இதை முதல்வரிடம் கொண்டுபோய் சேர்த்து, விவசாயிகள் பயன்பெறும் வகையில் இந்த பட்ஜெட் இருக்கும். அனைத்து விவசாயிகளுக்கும் முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி குறித்து முதல்வரிடம் ஆலோசனை செய்த பிறகு அறிவிக்கப்படும்” என அவர் தெரிவித்தார்.Agriculture Minister Vinoth has stated that an announcement regarding the full waiver of crop loans will be made after consulting the Chief Minister.ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்