ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டிக்கான நடுவர்கள் குழு அறிவிக்கப்பட்டுள்ளது.ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முதல் அரையிறுதிப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையில், நேற்று (ஜூலை 2) நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இங்கிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.The @emirates ICC International Panel of Match Officials to officiate the Women's #T20WorldCup Final have been named https://t.co/GCyg6ZxFGa— T20 World Cup (@T20WorldCup) July 3, 2026இந்த நிலையில், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான இறுதிப்போட்டிக்கான நடுவர்கள் குழுவை ஐசிசி அறிவித்துள்ளது.கள நடுவர்களாக ஜாக்லின் வில்லியம்ஸ் மற்றும் விருந்தா ரதி செயல்படவுள்ளனர். மூன்றாம் நடுவராக கிம் காட்டனும், நான்காம் நடுவராக நிமலி பெரேராவும் செயல்படவுள்ளனர். போட்டியின் நடுவராக ஜிஎஸ் லக்ஷ்மி செயல்படவுள்ளார்.இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான இறுதிப்போட்டி நாளை மறுநாள் (ஜூலை 5) லார்ட்ஸ் திடலில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.The panel of umpires for the final of the ICC Women's T20 World Cup has been announced.அறிமுகமாக காத்திருக்கும் வைபவ் சூர்யவன்ஷி; அழுத்தத்தில் இருக்கிறாரா சஞ்சு சாம்சன்?