கால்பந்து உலகக் கோப்பை ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில் ஸ்விட்சர்லாந்து அணி அல்ஜீரியாவை 2-0 என வீழ்த்தி, அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. உலகக் கோப்பையில் ஸ்விட்சர்லாந்து அணி 1954க்குப் பிறகு முதல்முறையாக நாக் அவுட் சுற்றில் வென்று வரலாறு படைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. கனடாவில் வான்கூவரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஸ்விட்சர்லாந்தின் ப்ரீல் எம்போலோ 10ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தார். முதல்பாதி 1-0 என ஸ்விட்சர்லாந்து முன்னிலை வகித்தது. பின்னர், இரண்டாம் பாதியின் முதல் நிமிஷத்திலேயே (46’) ஸ்விட்சர்லாந்தின் டான் டோயே கோல் அடித்து 2-0 என முன்னிலைப் பெற வைத்தார். இறுதிவரைக்கும் அல்ஜீரியா அணியினால் ஸ்விட்சர்லாந்தின் டிஃபெண்டர்களைத் தாண்டி கோல் அடிக்க முடியாமலே முடிந்தது. ஸ்விட்சர்லாந்து அணி 72 ஆண்டுகளுக்குப் பிறகு தனது முதல் நாக் அவுட் வெற்றியைப் பெற்றுள்ளது. 1938 முதலே நாக் அவுட் சுற்றில் வெல்லாத ஸ்விட்சர்லாந்து அணி 1954ல் பிளே ஆஃப் மூலமாக காலிறுதிக்கு முன்னேறியிருந்தது. 1954 போட்டி இல்லாமல் பார்த்தால் 88 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் நாக் அவுட் வெற்றியைப் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.Switzerland are through to the @FIFAWorldCup Round of 16 for the fourth consecutive time! It’s their first win in the knockout stages since 1954! pic.twitter.com/H3NeIwJcdI— FIFA (@FIFAcom) July 3, 2026ஓயார்ஜபால் 2 கோல்கள்: 2010க்குப் பிறகு முதல் நாக் அவுட் வெற்றியைப் பெற்ற ஸ்பெயின்! Embolo, Ndoye score as Switzerland moves on at the World Cup with a 2-0 win over Algeria