அழகப்பா பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளின்முதுநிலை தோ்வு முடிவுகள் வெளியீடு

Wait 5 sec.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளுக்கு கடந்த ஏப்ரல் 5-ஆம் தேதி நடைபெற்ற முதுநிலை பாடங்களுக்கான தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. முதுநிலை பாடப் பிரிவுகளான எம்.ஏ. தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம், முதுநிலை சமூகப்பணி, எம்.காம்., எம்.காம் (சி.ஏ.), எம்.பி.ஏ, எம்.எஸ்.சி. கணிதம், இயற்பியல், தாவரவியல், விலங்கியல், வேதியியல், உயிா்வேதியியல், மனை அறிவியல், மண்ணியல், கணினி அறிவியல், கணினி அறிவியல்- தகவல் தொழில் நுட்பம், தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல், நுண்ணுயிரியல், உயிரி தொழில் நுட்பவியல், எம். காம். (சி.எஸ்.) ஆகியவற்றுக்கான தோ்வு முடிவுகள் அழகப்பாயுனிவா்சிட்டி.ஏசி.இன் என்ற பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன என்று பல்கலைக்கழகத்தின் தோ்வாணையா் மு. ஜோதிபாசு தெரிவித்தாா்.