டாட்டா அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு இதுவரை விண்ணப்பிக்காத தகுதியானவர்கள் விரைந்து விண்ணப்பிக்கவும். இது குறித்த விபரம் வருமாறு:அறிவிப்பு எண்.: 2026/6பணி: Scientific Officer (C)காலியிடங்கள்: 3சம்பளம்: மாதம் ரூ. 1,18,110தகுதி: Computer Science & Engineering, Information Technology, Mechanical Engineering,Cryogenic Engineering பிரிவில் பிஇ அல்லது பி.டெக் தேர்ச்சியு டன் குறைந்தது 2 முதல் 3ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.பணி: Jr. Engineer(B)காலியிடம்: 1சம்பளம்: மாதம் ரூ. 73,020தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல் பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் டிப்ளமோ முடித்து கணினி அறிவுத்திறனும் 2 ஆண்டுகள் பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.பணி: Scientific Assistant (B)காலியிடங்கள்: 3சம்பளம்: மாதம் ரூ.73,020தகுதி: Physics,Chemistry,Computer Science, Information Technology,Information Science,Electronics & Communication, Radio Physics,Optics பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் பெற்றிருப்பதுடன் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கணினியில் அறிவுத் திறன் பெற்றிருக்க வேண்டும்.பணி: Administrative Assistantகாலியிடங்கள்: 3சம்பளம்: மாதம் ரூ.73,020தகுதி: ஏதாவதொரு பிரிவில் 55 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் Word Processing,Data Base, Accounting Procedures-ல் நல்லத் திறமையும் 5 ஆண்டுகள் பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.வயதுவரம்பு: 33-க்குள் இருக்க வேண்டும்.ى.பணி: Supervisor(Cosmetics Maintenance)காலியிடம்: 1சம்பளம்: மாதம் ரூ. 73,020தகுதி : Hospitality Management பிரிவில் பட்டம் பெற்று 2 ஆண்டுகள் பணி அனுபவம் மற்றும் கணினியில் அறிவுத் திறன் பெற்றிருக்க வேண்டும்.வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.பணி: Tradesman (B)பிரிவு: Plumberகாலியிடங்கள்: 3பிரிவு: Electricianகாலியிடம்: 1பிரிவு: Welderகாலியிடம்: 1பிரிவு: Electricianகாலியிடம்: 1பிரிவு: Technician Mechatronicsகாலியிடம்: 1சம்பளம்: மாதம் ரூ.46,990தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மேற்கண்ட டிரேடுகள் ஏதாவதொன்றில் 60% மதிப்பெண் களுடன் ITI தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.பணி: Laboratory Assistantகாலியிடம்: 1சம்பளம்: மாதம் ரூ.46,990வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.தகுதி : Air Conditioning பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் ஐடி தேர்ச்சியுடன் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.பணி: Clerk (A)காலியிடங்கள்: 4சம்பளம்: மாதம் ரூ.46,990தகுதி: ஏதாவதொரு பிரிவில் 50 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் தட்டச்சில் அறிவுத்திறனும், கணினியில் திறமையும் ஒரு ஆண்டு பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.பணி: Work Assistant (Auxillary)காலியிடங்கள்: 4சம்பளம்: மாதம் ரூ.36,360தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.பணி: Work Assistant (Technical)பிரிவு: Air Conditioningகாலியிடம்: 1பிரிவு: Painterகாலியிடம் :1பிரிவு: Plumberகாலியிடம்: 1பிரிவு: Fitterகாலியிடம் :1தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Painter,Plumber,Fitter, Air Conditioning ஆகிய பிரிவுகளில் ஐடிஐ தேர்ச்சியுடன் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.சம்பளம்: மாதம் ரூ. 36,360வயது வரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.பணி: Security Guardகாலியிடங்கள்: 3சம்பளம்: மாதம் ரூ.36,360தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Defence, CAPF பிரிவில் 3 ஆண்டுகள் பணி அனுபவம் Fire Fighting Training, First Aid, NCC,Civil Defence Training பிரிவில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.வயது : 28-க்குள் இருக்க வேண்டும்.பணி: ProjectAdministrative Assistant (B)காலியிடம்: 1சம்பளம்: மாதம் ரூ. 63,900தகுதி: ஏதாவதொரு பிரிவில் 55சதவீத மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் பெற்று Word Processing,Database and Accounting Procedure-ல் நல்ல அறிவுத்திறனும் 5 ஆண்டுகள் பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.வயதுவரம்பு: 33-க்குள் இருக்க வேண்டும்.உச்ச வயதுவரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடல்திறன் தேர்வு மற்றும் டிரேடு தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.விண்ணப்பிக்கும் முறை: https://www.tifr.res.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 4.7.2026விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு மேற்கண்ட இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். The TATA Institute of fundamental Research has officially announced a massive 2026 recruitment Notification...விண்ணப்பித்துவிட்டீர்களா.. ? - எய்ம்ஸ் மருத்துவமனைகளில் குரூப் 'பி', 'சி ' பணிகள்!