வங்கக் கடலில் காற்றின் வேகம் காரணமாக புதுக்கோட்டையில் மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.தெற்கு குஜராத்திலிருந்து கா்நாடகம் வரை காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. மேலும், வடக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கதேச பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுவதால், வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் காற்றழுத்த தாழ்வு பகுதி வாக்கில் உருவாகக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதன் விளைவாக கோவை, நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (ஜூலை 4) இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.இந்த நிலையில், வங்கக் கடலில் காற்றின் வேகம் இருப்பதாகக் கூறி, புதுக்கோட்டை மாவட்ட விசைப் படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் இன்று (ஜூலை 4) முதல் மறு உத்தரவு வரும்வரையில் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத் துறை தடை விதித்துள்ளது.மேலும், தடையை மீறி கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மீன்வளத் துறை எச்சரித்துள்ளது.ஃபீனிக்ஸ் பறவையென மீண்டெழுகிறோம்: மு.க. ஸ்டாலின்Ban on fishing at sea in Pudukkottai