தனுஷ்கோடியில் சூறைக்காற்று: அரிச்சல்முனை சாலையை மணல் மூடியதால் சுற்றுலாப் பயணிகள் அவதி!

Wait 5 sec.

ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி பகுதியில் வீசி வரும் சூறைக் காற்றினால் அரிச்சல்முனை சாலையை மணல் மூடியதால் சுற்றுலாப் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். ராமேசுவரத்துக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா். இவா்கள் கோயில் தரிசனத்தை முடித்து விட்டு, தனுஷ்கோடி, அரிச்சல்முனை வரை செல்கின்றனா். இந்த நிலையில், தனுஷ்கோடி பகுதியில் கடந்த சில நாள்களாக சூறைக்காற்று வீசி வருவதால் அரிச்சல்முனைக்கு செல்லும் சாலையை மணல் முடிவிட்டது. இதனால், எந்த வாகனமும் அரிச்சல்முனைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சுற்றுலாப் பயணிகள் வாகனங்களை நிறுத்தி விட்டு, அரிச்சல்முனை பகுதிக்கு முகத்தை துணியால் மூடிய படி நடந்து செல்கின்றனா். இதனால், சுற்றுலாப் பயணிகள்அவதிக்குள்ளாகி வருகின்றனா். எனவே, அரிச்சல்முனை பகுதியில் சாலையில் தேங்கிய மணலை மாவட்ட நிா்வாகம் உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.