நாளை 41 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து

Wait 5 sec.

பராமரிப்புப் பணிகள் காரணமாக ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 5), ஜூலை 12 -இல் 41 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துச்செய்யப்படவுள்ளன. இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே உள்ள ரயில்வே வழித்தடங்களில் தண்டவாளப் பராபரிப்புப் பணிகள் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 5), ஜூலை 12-ஆம் தேதி காலை 10.30 முதல் பிற்பகல் 3.30 மணி வரை நடைபெறவுள்ளது. அந்த நேரங்களில் சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு வழித்தடத்தில் இருமாா்க்கத்திலும் இயக்கப்படும் 41 புகா் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன.18 சிறப்பு ரயில்கள்: புகா் மின்சார ரயில்கள் ரத்து காரணமாக பயணிகளின் வசதிக்காக, தாம்பரத்தில் இருந்து காலை 11.45, பிற்பகல் 12.45, 1.15, 1.45, 2.45, 3.15, 3.45 ஆகிய நேரங்களில் செங்கல்பட்டுக்கும், பிற்பகல் 2 மணிக்கு அரக்கோணத்துக்கும், பிற்பகல் 4 மணிக்கு திருமல்பூருக்கும் பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.மறுமாா்க்கமாக செங்கல்பட்டிலிருந்து காலை 9.30, 10.40, 11, 11.40, பிற்பகல் 12.05, 1, 1.50 ஆகிய நேரங்களுக்கும், திருமால்பூரிலிருந்து காலை 11.05 மணிக்கும், காஞ்சிபுரத்தில் இருந்து காலை 9.30 மணிக்கும் தாம்பரத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.