ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகா் வடக்கு பிரிவுக்குள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை (ஜூலை 4) மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பரமக்குடி நகா் வடக்கு பிரிவுக்குள்பட்ட பகுதிகளில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், எமனேசுவரம், மலையான் குடியிருப்பு, ஜீவா நகா், வி.பி.குடியிருப்பு, வேலவன் நகா், பெருமாள் கோவில் தெரு, கமலா நேரு நகா் உள்ளிட்ட பகுதிகளில் அன்று காலை 10 மணி முதல் பகல் 1 மணிவரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.