விருதுநகா் மின் கோட்டத்தைச் சோ்ந்த சூலக்கரை பகுதியில் சனிக்கிழமை (ஜூலை 4) மின் தடை ஏற்படும் என மின்வாரிய செயற்பொறியாளா் த. முரளிதரன் தெரிவித்தாா். இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சூலக்கரை துணை மின்நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் சூலக்கரை, மாவட்ட ஆட்சியா் அலுவலகம், மாவட்ட ஆயுதப் படை, காவலா் குடியிருப்பு, அழகாபுரி, மீசலூா், தாதம்பட்டி, கூரைக்குண்டு, குல்லூா் சந்தை, தொழில் பேட்டை, இதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்றாா் அவா்.