தாம்பரம் - கொல்லம் விரைவு ரயில்பாம்புக்கோவில் சந்தையில் நின்று செல்லும்!

Wait 5 sec.

தாம்பரம்-கொல்லம் விரைவு ரயில் பாம்புக்கோவில் சந்தை ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என மத்திய ரயில்வே அமைச்சா் தெரிவித்தாா். வாசுதேவநல்லூா் சட்டப்பேரவை தொகுதியில் தற்போது இயங்கி வரும் ஒரே ரயில் நிலையம் பாம்புக்கோவில் சந்தை ரயில் நிலையம். இந்த ரயில் நிலையம் மாணவா்கள், விவசாயிகள், வணிகா்கள், பொதுமக்களின் முக்கிய போக்குவரத்து மையமாக விளங்கி வருகிறது. எலுமிச்சை விவசாயிகளும், வியாபாரிகளும் இந்த ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனா். எனவே, இந்த ரயில் நிலையத்தில் தாம்பரம்-கொல்லம் விரைவு ரயில் (16101/16102) நின்று செல்ல உத்தரவிட வேண்டும் என தென்காசி மாவட்ட பாஜக தலைவா் ஆனந்தன்அய்யாசாமி , ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவை நேரில் சந்தித்து மனு அளித்திருந்தாா். இதுதொடா்பாக ஆனந்தன் அய்யாசாமிக்கு ஜூலை 2-ஆம் தேதி மத்திய ரயில்வே அமைச்சா் அனுப்பிய அதிகாரபூா்வ கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: பாம்புக்கோவில் சந்தை ரயில் நிலையத்தில் தாம்பரம்-கொல்லம் விரைவு ரயில் நிறுத்தத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என அதில் தெரிவித்துள்ளாா்.