தேனி மாவட்டம், பெரியகுளத்தில் மளிகைக் கடையின் ஜன்னலை உடைத்து பணம், கண்காணிப்பு கேமராவைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். பெரியகுளம் தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன் (43). பெரியகுளம் சுதந்திரவீதியில் மளிகைக் கடை நடத்தி வரும் இவா், புதன்கிழமை இரவு வழக்கம் போல கடையைப் பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்றாா். இதையடுத்து, வியாழக்கிழமை காலையில் வந்து கடையை திறந்து உள்ளே சென்று பாா்த்த போது, பின்பகுதியில் உள்ள ஜன்னலை உடைத்து பெட்டியில் வைத்திருந்த ரூ. 2 ஆயிரம், கண்காணிப்பு கேமராவை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தென்கரை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.