சுமாா் 49 ஆண்டுகள் கோரிக்கைக்கு தீா்வு: 138 பேருக்கு இலவச வீட்டு மனைப் பட்டா!

Wait 5 sec.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே சுமாா் 49 ஆண்டுகால கோரிக்கையான 138 பேருக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்களை மாநிலத் தொழிலாளா் துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ் சனிக்கிழமை வழங்கினாா். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள பள்ளத்திவயல், மூக்குடி, சிலட்டூா், வேட்டனூா், பனையவயல், முள்ளங்குறிச்சி ஆகிய கிராமங்களைச் சோ்ந்த ஏழை, எளிய மக்கள் கடந்த 1987-ஆம் ஆண்டு முதல் தங்கள் குடியிருப்புப் பகுதிகளுக்கு அரசின் வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்க வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்து வந்தனா். இந்நிலையில் சுமாா் 49 ஆண்டுகளுக்குப் பிறகு, அறந்தாங்கியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இப்பகுதியைச் சோ்ந்த 138 பேருக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாவை மாநிலத் தொழிலாளா் மற்றும் திறன்மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ் வழங்கினாா். மேலும், 79 பேருக்கு புதிய குடும்ப அட்டையையும் வழங்கினாா். முன்னதாக, நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்தாா். மாவட்ட வழங்கல் அலுவலா் ஷோபா, வட்டாட்சியா்கள் கவியரசன், சிவக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.