கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் போராட்டத்துக்கு காங்கிரஸ் ஆதரவு!

Wait 5 sec.

தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் நடத்தி வரும் போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவளித்துள்ளது. நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி நாட்டின் பல்வேறு நகரங்களிலும் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தி வந்தனர். இதனைத் தொடர்ந்து, தில்லியின் ஜந்தர் மந்தரில் கடந்த ஜூன் 20 அன்று முதல் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாட்டின் மாபெரும் இயக்கங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ள கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் போராட்டம் இளைஞர்கள் இடையே கவனம் பெற்று வருகிறது. இந்த நிலையில், தில்லியில் நடைபெறும் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் போராட்டத்துக்கு இன்று (ஜூலை 3) நேரில் சென்ற காங்கிரஸ் கட்சியின் அமராவதி தொகுதி மக்களவை உறுப்பினர் பல்வந்த் பஸ்வந்த் வான்கடே அந்த இயக்கத்தின் நிறுவனர் அபிஜீத் திப்கேவை சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். இந்தப் போராட்டத்தில் பங்கேற்று 6 ஆவது நாளாகத் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் லடாக்கைச் சேர்ந்த ஆர்வலர் சோனம் வாங்சுக்கையும் பல்வந்த் பஸ்வந்த் வான்கடே சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார். 6 வது நாளாக உண்ணாவிரதம்! சோனம் வாங்சுகின் உடல்நிலை தொடர்ந்து பின்னடைவு! The Congress party has extended its support to the protest being staged in Delhi by the 'Karappanpoochi Makkal Katchi'.