இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் முதலில் நடைபெற்று வரும் நிலையில், வருகிற ஜூலை 14 முதல் ஒருநாள் தொடர் தொடங்குகிறது.இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.16 players for our 3-match ODI series with India! Click below for the full squad — England Cricket (@englandcricket) July 3, 202616 பேர் கொண்ட அணியை ஹாரி ப்ரூக் கேப்டனாக வழிநடத்துகிறார். அன்கேப்டு வீரரான ஜேம்ஸ் கோல்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், இதுவரை ஒருநாள் போட்டிகளில் விளையாடாத ஜோஷ் டங்கும் அணியில் இடம்பெற்றுள்ளார்.இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி விவரம்ஹாரி ப்ரூக் (கேப்டன்), ரிஹான் அகமது, ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், டாம் பாண்டன், ஜேக்கப் பெத்தேல், ஜோஸ் பட்லர், ஜேம்ஸ் கோல்ஸ், சாம் கரண், பென் டக்கெட், வில் ஜாக்ஸ், சாக்யுப் மஹ்முத், அடில் ரஷீத், ஜோ ரூட், ஜோஷ் டங்.இந்தியா - இங்கிலாந்து ஒருநாள் தொடர் அட்டவணை விவரம்முதல் ஒருநாள் - ஜூலை 14, பர்மிங்ஹாம்இரண்டாவது ஒருநாள் - ஜூலை 16, கார்டிஃப்மூன்றாவது ஒருநாள் - ஜூலை 19, லார்ட்ஸ்The England cricket board has announced the squad for the ODI series against India.அறிமுகமாக காத்திருக்கும் வைபவ் சூர்யவன்ஷி; அழுத்தத்தில் இருக்கிறாரா சஞ்சு சாம்சன்?