தமிழகம் முழுவதும் 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.லஞ்ச புகாரின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலகங்களில் லஞ்சம் மற்றும் ஊழல் கண்காணிப்பு பிரிவினர் 40 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.நுங்கம்பாக்கம் உள்ளிட்ட மண்டல அலுவலகங்களிலும் நெல்லை, ஈரோடு, ராமநாதபுரம் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்று வருகின்றன.மேலும் புதுக்கோட்டை மாநகராட்சி அலுவலகம், ஒசூர் மாநகராட்சி அலுவலகத்திலும் லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள், பத்திரப்பதிவு அலுவலங்களைத் தொடர்ந்து மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களில் சோதனை நடைபெற்று வருகின்றன.ஒரே நாளில் உள்ளாட்சி அமைப்புகளில் நடைபெற்று வரும் லஞ்ச ஒழிப்புத் துறையினரின் சோதனையால் பரபரப்பு நிலவி வருகிறது. சோதனை முடிந்தவுடன் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.Officials from the Directorate of Vigilance and Anti-Corruption are conducting raids at 40 locations across Tamil Nadu.பெரம்பூர் தொகுதி மக்களுக்கு வருகிறது சிறப்பு செயலி! முதல்வர் வருவது எப்போது?