டி20 உலகக் கோப்பைத் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி தென்னாப்பிரிக்க வீராங்கனை ஷப்னிம் இஸ்மாயில் வரலாறு படைத்துள்ளார்.ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஓவலில் நேற்று (ஜூலை 2) நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இங்கிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.நேற்றையப் போட்டியில் தென்னாப்பிரிக்க வீராங்கனை ஷப்னிம் இஸ்மாயில் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இதன் மூலம், டி20 உலகக் கோப்பை வரலாற்றில் 50 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்தார். டி20 உலகக் கோப்பைத் தொடரில் இதுவரை அவர் 51 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.Back from retirement, straight into the history books Shabnim Ismail becomes the first to 50 Women's #T20WorldCup wickets pic.twitter.com/PcN11mC9B8— T20 World Cup (@T20WorldCup) July 3, 2026டி20 உலகக் கோப்பைத் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீராங்கனைகள்ஷப்னிம் இஸ்மாயில் (தென்னாப்பிரிக்கா) - 51 விக்கெட்டுகள்மேகன் ஷுட் (ஆஸ்திரேலியா) - 48 விக்கெட்டுகள்எல்லிஸ் பெரி (ஆஸ்திரேலியா) - 44 விக்கெட்டுகள்அன்யா ஷ்ரப்சோல் (இங்கிலாந்து) - 41 விக்கெட்டுகள்மாரிஸேன் காப் (தென்னாப்பிரிக்கா) - 39 விக்கெட்டுகள்South African player Shabnim Ismail has made history by taking the most wickets in the T20 World Cup tournament.டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கான நடுவர்கள் குழு அறிவிப்பு!