கால்பந்து உலகக் கோப்பையில் ஸ்பெயின் கோல்கீப்பர் 519 நிமிஷங்கள் விளையாடி ஒரு கோல் கூட விட்டுக்கொடுக்காமல் புதிய வரலாற்றை நிகழ்த்தியுள்ளார். நடப்பு உலகக் கோப்பையில் ஸ்பெயின் அணி ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில் ஆஸ்திரியாவுடன் மோதியது. இதில் 3-0 என அபார வெற்றியுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. 2010க்குப் பிறகு முதல்முறையாக நாக் அவுட் போட்டியில் வென்றுள்ளது. ஸ்பெயின் அணி குரூப் சுற்றில் 3 போட்டிகளில் 0-0, 1-0, 4-0 என்ற கோல்கள் கணக்கில் வென்றது. தற்போது முதல் நாக் அவுட் சுற்றான ரவுண்ட் ஆஃப் 32விலும் 3-0 என வென்றுள்ளது. தொடர்ச்சியாக நான்கு போட்டிகளிலும் ஒரு கோல்கூட எதிரணிக்கு விட்டுக்கொடும்மால அசத்தியுள்ளது. அந்த அணியின் கோல் கீப்பர் உனாய் சிமோன் இந்த வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளார். மொத்தமாக உனாய் சிமோன் 519 நிமிஷங்கள் விளையாடி கோல்கள் அடிக்க விடாமல் தடுத்துள்ளார். முன்னதாக, 517 நிமிஷங்கள் கோல் அடிக்காமல் தடுத்த இத்தாலியின் கோல்கீப்பர் வால்டர் ஜெங்கா (1990) முதலிடத்தில் இருந்தார்.தற்போது, உலக சாதனையில் உனாய் சிமோன் இடம்பெற்றுள்ளார். அடுத்த சுற்றில் போர்ச்சுகல் உடன் ஸ்பெயின் மோதவிருக்கிறது.எம்.எஸ். தோனியும் ஜோகோவிச்சும்... மனம் திறந்த தீப்தி சர்மா! 519 minutes, no goals conceded—Unai Simon scripts World Cup history for Spain