நாக் அவுட் சுற்றில் மங்கிய ஆப்பிரிக்க அணிகளின் ஆதிக்கம்..! 9ல் 2 மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்!

Wait 5 sec.

கால்பந்து உலகக் கோப்பையின் லீக் சுற்றில் ஆதிக்கம் செலுத்திய ஆப்பிரிக்க கண்டத்திலுள்ள அணிகள், நாக் அவுட் சுற்றில் சொதப்பின.லீக் சுற்றில் இருந்து பத்து அணிகளில் ஒன்பது அணிகள் ரவுண்ட் ஆஃப் 32 சுற்றுக்கு முன்னேறி வரலாறு படைத்தது. தற்போது, ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு இரண்டு அணிகள் மட்டுமே முன்னேறியுள்ளன. இந்த உலகக் கோப்பையில் லீக் சுற்றில் அல்ஜீரியா, கேப் வெர்டே, காங்கோ, ஐவரி கோஸ்ட், எகிப்து, கானா, மொராக்கோ, செனகல், தென்னாப்பிரிக்கா, துனிசியா ஆகிய அணிகள் பங்கேற்றன. இதிலிருந்து துனிசியா மட்டுமே லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்த நிலையில், நாக் அவுட் சுற்றில் இருந்து ஏழு அணிகள் வெளியேற மொராக்கோ, எகிப்து ஆகிய இரு அணிகள் மட்டுமே காலிறுதிக்கு முந்தைய சுற்றான ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறியுள்ளன. கானா அணி கொலம்பியாவுடன் தோல்வியுற்று, கடைசி ஆப்பிரிக்க அணியாக உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியது. மொராக்கோ கனடாவுடனும், எகிப்து ஆர்ஜென்டீனாவுடனும் அடுத்த சுற்றில் மோதவிருக்கின்றன. மொராக்கோ அணி கடந்த 2022 உலகக் கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியது. நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனாவை வீழ்த்தினால் எகிப்து காலிறுதிக்கு முன்னேறும் என்ற கடினமான வாய்ப்பு இருக்கிறது. கடைசியாக ஆர்ஜென்டீனா ஆப்பிரிக்க நாடான கேப் வெர்டேவியம் கூடுதல் நேரத்தில் போராடி 3-2 என வென்றது.கானா அணியின் ஃபார்வேடு வீரர், “நீண்ட காலங்களாக, ஆப்பிரிக்க நாடுகளால் மிகப்பெரிய தொடர்களில் எதாவது செய்ய முடியுமா என்ற சந்தேகம் இருந்தது. தற்போது அனைத்து ஆப்பிரிக்க நாடுகளுக்கும் வெற்றி கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அனைத்து நாடுகளைப் போலவே ஆப்பிரிக்காவிலும் திறமைசாலிகள் இருக்கிறார்கள் என்றார். தோல்வியடைந்தாலும் இந்தத் தொடரில் ஆப்பிரிக்க நாடுகள் கால்பந்து ரசிகர்களின் மனதைக் கவர்ந்தார்கள் என்பதில் ஆச்சரியமில்லை. குறிப்பாக, கேப் வெர்டே கோல்கீப்பர் ஒரே நாளில் தனது பல மில்லியன் ஃபாலோயர்களைப் பெற்றார். கோல்கீப்பிங்கில் ஆதிக்கம்: 4 போட்டிகளில் ஒரு கோல்கூட விட்டுக்கொடுக்காத இரு அணிகள்! Africa''s World Cup surge fades as Ghana falls to Colombia, leaving Morocco and Egypt still standing .